டாஸ்மாக் கடைகளை அரைமணி நேரம் முன்பே மூட முடியுமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!!

டாஸ்மாக் கடைகளை அரைமணி நேரத்திற்கு முன்பே மூட முடியுமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

highcourt question to tn govt that can tasmacs close half an hour earlier

டாஸ்மாக் கடைகளை அரைமணி நேரத்திற்கு முன்பே மூட முடியுமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குவோர் சாலை ஓரங்கள், மதுபானக் கடை முன்பு மற்றும் பொது இடங்களில் மது அருந்துவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருப்பூரில் ரூ.1.78 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்; கேரளா போலீசார் அதிரடி

மேலும் இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு.

இதையும் படிங்க: இரு மொழி கொள்கையால் தான் தமிழர்கள் உலகெங்கும் சென்று பணியாற்றுகின்றனர் - அப்பாவு

பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணி நேரத்திற்கு முன்பே மூட முடியுமா? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios