கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசில் ஒப்படைக்க வேண்டும்… பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு வழக்கில் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

highcourt orders the parents that cell phone used by the kallakurichi student should be handed over to the police

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு வழக்கில் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதை அடுத்து மாணவியின் உறவினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து பள்ளி வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் பள்ளி முழுவதையும் அடித்து நொறுக்கினர்.

இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கலனா என்ன நடக்கும்? அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு தகவல்..!

இதனிடையே உயிரிழந்த மாணவியின் இறப்புக்கு நீதிக்கேட்டு அவரது பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி சந்திர சேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில், நான்கு முறை இந்த வழக்கு சம்பந்தமாக சம்மன் அனுப்பியும், பெற்றோர் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த விசாரணை நிறைவடையவுள்ளது என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இளைஞர்களிடம் முதலீடு செய்வதாக கூறி பண மோசடி… கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக கூறியதால் பரபரப்பு!

அப்போது குறுக்கிட்ட ஸ்ரீமதி பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், ஸ்ரீமதி செல்போன் வைத்திருக்கவில்லை, விடுதி வார்டனின் செல்போனில்தான் பேசினார் என்று தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி, மாணவியின் செல்போனை ஒப்படைப்பதில் பெற்றோருக்கு என்ன பிரச்னை? செல்போனை ஒப்படைக்காவிட்டால் விசாரணை எப்படி நிறைவடையும்? ஸ்ரீமதியின் செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காவிட்டால் விசாரிக்க உத்தரவிட நேரிடும் என்று தெரிவித்து வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios