மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கலனா என்ன நடக்கும்? அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு தகவல்..!
கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7 கோடி வருமானம் வந்த நிலையில், தற்போது மாதத்திற்கு ரூ.13 கோடி வருமானம் வருகிறது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி;- மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. இதுவரை 1.5 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தேவைப்பட்டால் கூடுதல் சிறப்பு முகாம்களை நடத்த மின்வாரியம் தயாராக இருக்கிறது.
இதையும் படிங்க;- மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க கட்டணமா.? அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்
தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் என்ன நடக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் தயவு செய்து ஒரு பதற்றத்தை உருவாக்க வேண்டாம். இது ஒரு நல்ல முயற்சி. சில பேர் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நேர்த்தியாக ஆதார் எண் இணைப்பு நடைபெறுகின்றது.
கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7 கோடி வருமானம் வந்த நிலையில், தற்போது மாதத்திற்கு ரூ.13 கோடி வருமானம் வருகிறது. இயக்கத்தின் வெற்றிக்காக சிறப்பாக வழிநடத்தியவர் உதயநிதி. அமைச்சர்களுக் கெல்லாம் முன்னுதாரணமாக செயல்படுவார். முதல் நிகழ்வாக மின்சாரத்துறையின் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது முறை அல்ல என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பால் பேராபத்து.. தகவல்கள் திருடப்படக்கூடிய அபாயம்.. பகீர் கிளப்பும் சீமான்..!