Asianet News TamilAsianet News Tamil

ஈஷாவை கல்வி நிறுவனமாக தான் கருதமுடியும்... மாசு கட்டுப்பாட்டு வாரிய நோட்டீஸை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

highcourt cancelled notice sent by tn pollution control board to Isha
Author
First Published Dec 14, 2022, 9:56 PM IST

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதாக கூறி ஈஷா அறக்கட்டளைக்கு கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: டிட்கோ தொழிற்பூங்கா அமைக்க விளை நிலங்கள் ஒருபோதும் எடுக்கப்படாது… ஆ.ராசா விளக்கம்!!

அப்போது, ஈஷா அறக்கட்டளை சார்பில், உடல், மனம், நன்னெறி  மேம்படுத்தம்  நிறுவனங்களை, கல்வி நிறுவனங்களாகவே கருத வேண்டும். அதனால் ஈஷா அறக்கட்டளை கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என வாதிடப்பட்டது. மத்திய அரசு தரப்பில், கல்வி போதிக்கும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு பெற முடியும் என்பதால்,  ஈஷா அறக்கட்டளையும் விலக்கு கோர முடியும் என வாதிடப்பட்டது. இதை அடுத்து தமிழக அரசு தரப்பில், ஈஷா அறக்கட்டளை கல்வி நிறுவனமா இல்லையா என்பதே தற்போது வரை சர்ச்சைக்குரிய கேள்வியாக உள்ளது எனவும், 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் உள்ள ஈஷா அறக்கட்டளை வளாகத்தில், 10 ஆயிரம் சதுர மீட்டர் மட்டுமே யோகா மையம் செயல்படுகிறது என்பதால் அதை மட்டுமே கல்வி நிறுவனமாக கருதலாம் என்று வாதிடப்பட்டது.

இதையும் படிங்க: டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு… பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் நடவடிக்கை!!

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கட்டுமானம் அமைந்துள்ள மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர்  பரப்பளவு நிலத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்தில் கல்வி நிலையங்களும் அமைந்துள்ளதால் சுற்றுச்சூழல் விலக்கு பெற உரிமை உள்ளது. யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும். ஆகவே ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios