டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு… பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் நடவடிக்கை!!
போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியாக 5 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியாக 5 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவர் திரைப்பட அலுவலகத்தை தொடங்க உள்ள நிலையில் அதனை திறந்து வைக்க யூடியூபரான டிடிஎஃப் வாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று கடலூர் வந்த டிடிஎஃப் வாசனை காண ஏராளமானோர் கூடியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: 100 நாள் வேலைகள் சரியாக நடப்பதில்லை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து!!
அதுமட்டுமின்றி சாலையிலேயே இருசக்கர வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்த கலைந்து செல்லும் படி கூறியுள்ளனர். ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் அங்கிருந்தவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் விரட்டி அடித்தனர்.
இதையும் படிங்க: டிட்கோ தொழிற்பூங்கா அமைக்க விளை நிலங்கள் ஒருபோதும் எடுக்கப்படாது… ஆ.ராசா விளக்கம்!!
மேலும் அங்கு கூடியிருந்தவர்கள் மற்றும் அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். மேலும் இதற்கு காரணமாக இருந்த டிடிஎஃப் வாசன் மீது ஐந்து பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்ததோடு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இயக்குனர் செந்தில் செல்லம் மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.