High Court Instruction Medical consultation

ஜூலை 17 ஆம் தேதி மருந்துவ கலந்தாய்வு நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்தது.

நீட் தேர்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டது. எனினும் மாநில வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 85 சதவீத இட ஒதுகீடு வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

இதை எதித்து தொடரப்பட்ட வழக்கில் 85 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ரவிசந்திரபாபு ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலையையே தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் தரவரிசைப் பட்டியல் வெளியிடக்கூடாது, தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையை தொடர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.