அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் ஏடாகுடமாக மழை பெய்ய போகுதாம்! வானிலை மையம் அலர்ட்!

சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Heavy rain warning in these 8 districts in next 3 hours tvk

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில்  நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வடக்கு பகுதியில் தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. இ்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 

இதையும் படிங்க: School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டது. அதேபோல், சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க:  Palani Murugan Temple:பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு! கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் (அதாவது காலை 10 மணிவரை) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios