Asianet News TamilAsianet News Tamil

தொடரும் கனமழை.. சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை - அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Public Holiday : சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழக அரசு நாளை டிசம்பர் 5ம் தேதி பொதுவிடுமுறையை அறிவித்துள்ளது.

Heavy Rain Tamil Nadu Government Declared Public Holiday on December 5 for 4 districts ans
Author
First Published Dec 4, 2023, 1:57 PM IST

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது, இதனையடுத்து "மிக்ஜாங்" சூறாவளி, புயலாக தீவிரமடைந்து, இன்று காலை 08.30 மணிக்கு சென்னைக்கு அருகில் மையம் கொண்டிருந்தது. இதனையடுத்து நாளை அந்த புயல் சென்னை மற்றும் ஆந்திர எல்லை அருகே கரையை கடக்க உள்ள நிலையில், கனமழை பெய்யும் என்றும் காற்றின் வேகம் 90 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனையடுத்து கனமழையை கருத்தில் கொண்டு தமிழக அரசு நாளை 05.12.2023 செவ்வாய்கிழமை மேற்குறிய நான்கு மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்க முடிவு செய்துள்ளது. ஆகவே அம்மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு வங்கிகள் இயங்காது.

கனமழை எதிரொலி.. மொத்தம் 20 விமானங்கள் ரத்து - இன்று இரவு வரை மூடப்படும் சென்னை விமான நிலையம்!

புயல் தற்பொழுது வலுவிழந்து வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழையின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாளை புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பெரிய அளவில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மேற்கூறிய நான்கு மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் உரிய அறிவிப்பு வரும் வரை தேவை இன்றி வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறும், அவசியம் இல்லாத பயணங்களை நிறுத்துமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மிக்ஜாம் புயலின் அடுத்த டார்கெட் திருவள்ளூர்... அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்

Heavy Rain Tamil Nadu Government Declared Public Holiday on December 5 for 4 districts ans

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய ரயில்களும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களும் தொடர்ச்சியாக ரத்தாகி வரும் நிலையில் ஏற்கனவே 11 ரயில்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை விமான நிலையமும் இன்று இரவு 11 மணி வரை மூடப்படும் என்கின்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios