Asianet News TamilAsianet News Tamil

தனித்தீவாக மாறிய திருச்செந்தூர்... முருகன் கோவிலை சுற்றி கரைபுரண்டு ஓடிய வெள்ளம் - வீடியோ இதோ

திருச்செந்தூரில் விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள முருகன் கோவில் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

Heavy Rain lashes out Tiruchendur murugan temple surrounded by Flood water viral video gan
Author
First Published Dec 18, 2023, 3:57 PM IST

திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் தூத்துக்குடி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, கல்லாமொழி, ஆலந்தலை, பரமன்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதில் காயல்பட்டினம்,  திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகள் வெள்ளக்காடானது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தற்போது  தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் திருச்செந்தூர் பேருந்து நிலையம், நெடுஞ்சாலைதுறை அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரால் குளம் போல் காட்சியளித்து வருகிறது. நகர் பகுதியில் முக்கிய சாலைகளில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர். 

மேலும் திருச்செந்தூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோவிலை சுற்றி கட்டப்பட்டு சுற்றுச்சுவரையும் தாண்டு வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி கடலில் கலந்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனால் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதையும் படியுங்கள்... நெல்லை கனமழை: வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரம்

Follow Us:
Download App:
  • android
  • ios