தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! 17 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை- வானிலை மையம்

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Heavy rain is likely to occur in Tamil Nadu in two day  Meteorological Department said

 தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழையின் தாக்கம் அதிகளவு ஏற்பட்டது. இந்தநிலையில் மீண்டும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள  பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு  திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல்  பகுதிகளில்  அடுத்த  48 மணி நேரத்தில் வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு - வடமேற்கு  திசையில் தமிழக - புதுவை  மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 

Heavy rain is likely to occur in Tamil Nadu in two day  Meteorological Department said

17 மாவட்டங்களில் மழை

18.11.2022 மற்றும் 19.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  


20.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர்,  அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை,  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வன்முறைக்கு காரணமே கே.எஸ் அழகிரி தான்..! தலைவர் பதவியில் இருந்து நீக்கிடுங்க..! காங்கிரஸ் நிர்வாகி போர்கொடி

Heavy rain is likely to occur in Tamil Nadu in two day  Meteorological Department said


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கூட்டணியில் கூட விடுதலை சிறுத்தை வேண்டாம் என சொல்லவே 99 சதவீதம் பேர் உள்ளனர்..! திருமாவளவன் ஆதங்கம்

Heavy rain is likely to occur in Tamil Nadu in two day  Meteorological Department said

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

செங்கோட்டை (தென்காசி) 9, குண்டாறு அணை (தென்காசி) 6, பாபநாசம் (திருநெல்வேலி) 5, மாஞ்சோலை (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 4,  கடனா அணை (தென்காசி), தேக்கடி (தேனி), ராமநதி அணை (தென்காசி) தலா 3, தென்காசி (தென்காசி), 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

18.11.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மற்றும்  மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Heavy rain is likely to occur in Tamil Nadu in two day  Meteorological Department said

19.11.2022: தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.11.2022 மற்றும் 21.11.2022: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக - புதுவை கடலோரப்பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்   மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தெலுங்குத் திரைப்படங்களை வெளியிடவிடமாட்டோம் .! விஜயின் வாரிசு படத்திற்கு ஆதரவாக களம் இறங்கிய சீமான் எச்சரிக்கை

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios