Tamilnadu Rain: அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 25 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Heavy rain is going to lash these 25 districts for the next 3 hours.. meteorological centre

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;- கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம்,கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க;- சென்னையில் கொட்டுகிறது கோடை மழை... மகிழ்ச்சியில் ஆழ்ந்த மக்கள்!!

Heavy rain is going to lash these 25 districts for the next 3 hours.. meteorological centre

இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Heavy rain is going to lash these 25 districts for the next 3 hours.. meteorological centre

இதனிடையே, சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று பகலில் மிதமான மழை பெய்த நிலையில், இரவு நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. திருவல்லிக்கேணி, வடபழனி, போரூர், குரோம்பேட்டை, மயிலாப்பூர், கோடம்பாக்கம், அம்பத்தூர், நுங்கம்பாக்கம்  உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை முதலே சென்னையில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

இதையும் படிங்க;-  பணி ஓய்வு பெற்ற ஆட்சியரின் உதவியாளர்... ஆட்சியர் காரில் வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios