சென்னையில் கொட்டுகிறது கோடை மழை... மகிழ்ச்சியில் ஆழ்ந்த மக்கள்!!
சென்னையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாநிலத்தில் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சில நாட்களாக மழை பெய்ததை அடுத்து வெப்பம் குறைந்து குளிர்ச்சியான தட்பவெட்பம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: நாகையில் அரசுப் பேருந்தில் இருந்து மீனவப் பெண்கள் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு
இதனால் சென்னை மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததாக கூறப்படுகிறது. சென்னையில் தற்போது கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. வெயிலின் தாக்கம் தாங்காமல் தவித்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தற்போது மழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: நாகையில் மதுபோதையில் தறிகெட்டு ஓடிய விவசாய சங்க தலைவரின் கார் மோதி ஒருவர் பலி
இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. சென்னையில் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம் , பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.