தமிழகத்தில் மார்ச் மாதம் மழை வெளுத்து வாங்கும் என்றும், இந்த மழை வரலாற்றில் இடம் பெறும் என்றும் வெதர்மேன் அறிவித்திருந்தார். ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் நீங்கலாக  தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக லேசான மழை பெய்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மழை பொய்த்துப் போனதால் பொது மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று இடித்துக் கூறுகிறார் வெதர்மேன்.

அதுவும் குறிப்பாக சென்னையில் நாம் எதிர்பார்ப்பதைவிட கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாக அவர் தெரிவிக்கிறார்

இந்த மழை குறித்து தற்போதே அறிவிப்பது முன்கூட்டிய கணிப்பு என்றும், ஆனால் இந்த முறை சென்னைக்கு மழை என்பதால் அதிக எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளத என்றுங்ம வெதர்மேன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு வெயில் கடுமையாக இருந்தாலும் கத்திரி வெயில் காலத்தில் மழை பெய்து ஓரளவுக்குவெப்பத்தை தணிததது .அதைப்போன்று இந்த ஆண்டும் அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாகஉள்ளது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என்கிறார் வெதர்மேன்.

ஏமாறும் மாதம்தான் ஏப்ரல் என்றாலும் மழை விஷயத்தில் ஏப்ரல்  ஏமாற்றாது என்றே நம்பலாம்…ஆம்ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் மழை சென்னையை நனைக்கும்…நனைய தயாராக இருங்க்ள்…