63 ஆண்டுகளுக்கு பின்.....20 செமீ மழை....கோடை வெயிலுக்கு நடுவே நிகழ்ந்த அதிசயம்...!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக மாறி தற்போது லட்சத்தீவு,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தொடர்ந்து நிலவி வருகிறது

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய  இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்....  

63 ஆண்டுகளுக்கு பின் தூத்துக்குடி....

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, 200 மி.மீ மழை பெய்துள்ளது.அதாவது 63 ஆண்டுகளுக்கு பின் தூத்துக்குடியில்,அதுவும் கொளுத்தும் கோடையில்,வெளுத்து வாங்கியுள்ளது மழை.

நேற்று,வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த மழையை தொடர்ந்து ‘மூன்றாம் எண்’ புயல் ஏற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் மழை காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல முடியாத சூழல்  நிலவுகிறது.மேலும், மின் இணைப்பு கூட பல இடங்களில் துண்டிக்கப்பட்டு உள்ளது

மேலும்,கனமழை காரணமாக ஆங்காங்கு மழை நீர் தேங்கி இருப்பதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி உள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த 1995 டிசம்பர் மாதம் 188 மி.மீ மழையே, தூத்துக்குடியில் பெய்த அதிக அளவு மழையாக இருந்தது.

இதனை முறியடித்து தற்போது தூத்துக்குடியில் 200.8 மி.மீ மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.