கஜா புயல் தற்போது நாகையின் வடகிழக்கே 120  கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும்போது  110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரித்ததையடுத்து பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வங்ககடலில்உருவாகியுள்ளகஜாபுயலால்திருவாரூர், காரைக்கால்மற்றும்நாகையில்மழைபெய்துவருகிறது.

திருவாரூரை அடுத்த ஆண்டிபந்தல், சன்னாநல்லூர், நன்னிலம், குடவாசல்உள்ளிட்டபகுதிகளில்பலத்த மழைபெய்துவருகிறது. இதேபோன்றுகாரைக்காலில்கோட்டிச்சேரிமேடு, கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரிஉள்ளிட்டபகுதிகளிலும், நாகையில்மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, மங்கைநல்லூர்உள்ளிட்டபகுதிகளிலும்மழைபெய்துவருகிறது.

கனமழை மற்றும் சூறைக் காற்றால் வேதாரண்யம்மற்றும்சுற்றுவட்டாரபகுதிகளில்மின்விநியோகம்நிறுத்தப்பட்டுள்ளது. நாகையில்குடிசை, ஆஸ்பெஸ்டாஸ்வீடுகளில்வசிக்கும்மக்கள்முகாம்களுக்குசெல்லும்படிஅறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் மினசார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது,பல மீனவ கிராமங்களில் மின்வாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதே போல் புதுச்சேரியிலும்கனமழைபெய்து வருகிறது. . காரைக்கால், கோட்டிச்சேரிமேடு, கிளஞ்சல்மேடு, பகுதிகளிலும்மழைபெய்தது.