கஜா  புயல் வேதாரண்யத்தில் இருந்து 80  கிலோ மீட்டர் நெருங்கி வந்துள்ள நிலையில், அதன் வெளிப்பாகம் தற்போது கடற்கரையைத் தொட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் மையக் கண் நள்ளிரவு 12 மணிக்கு கரையை கடக்க்த தொடங்கும் என்று சென்னை வாளிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.

சற்று ரேத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்க கடலில் உருவான கஜா புயலானது நாகை கடற்கரையில் இருந்து  தற்போது  80  கி.மீ. தொலைவில் உள்ளது.  கஜா புயல் கரையை கடக்கும்போது 110  கி.மீ முதல் 120  கி.மீ வரை காற்று வீசும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாம் எதிர்பார்த்ததைவிட காற்று மிகக் கடுமையானதாக  இருக்கும் என்றும், நள்ளிரவு 12 மணி முதல் 3 மணிக்குள் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ராமேஸ்வரம், ராமநாதபுரம், திருவாரூர், மன்னார்குடி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது,