வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடக்கமாக தற்போது  ஆந்திரா, கேரளா கர்நாடகா கடற்கரை பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. 

தற்போது ஏற்பட்டு உள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழகம் முழுவதும் ஆங்காங்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

சென்னையில் போரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்து உள்ளது.