Asianet News TamilAsianet News Tamil

உஷார் மக்களே !! இன்றைக்குக் கொட்டி தீர்க்கப் போகும் மழை.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 

Heavy Rain in 9 districts - Weather Update
Author
Tamil Nadu, First Published Jul 25, 2022, 2:40 PM IST

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

25.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, பெரம்பலூர்‌, அரியலூர்‌,
திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

26.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:பள்ளி மாணவி தற்கொலை.. நைட் நல்லா தான் பேசுனா.. ஆனா காலையிலே எம்பிள்ளை உயிரோட இல்லை.. கதறும் பெற்றோர்..

27.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

28.07.2022. 29.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, திருப்பூர்‌, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி,
திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை
26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க:பிளஸ் 2 மாணவி தற்கொலை.. வழக்கு சிபிசிஐடி மாற்றம்.. விடுதி காப்பாளரிடம் விசாரணை..

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios