இன்று 5 மாவட்டங்களில் கனமழை !! இந்தெந்த பகுதிகளில் வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Heavy Rain in 5 districts - Weather Update

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நேற்று ஆந்திர கடலோரப்‌ பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (11.09.2022) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா பகுதிகளில்‌ நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்‌. இதன்‌ காரணமாக,

11.09.2022 மற்றும்‌ 12.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களின்‌ மலை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

14.09.2022 மற்றும்‌ 15.09.2022: புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க:கல்குவாரிக்கு எதிராக புகார்...! லாரியை ஏற்றி கொலை... துடி துடித்து பலியான விவசாயி

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

11.09.2022: மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்பகுதிகள்‌, மத்திய மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ ஆந்திர கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌
வீசக்கூடும்‌.

12.09.2022: மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, மத்திய மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌..

13.09.2022: மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

14.09.2022: மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பரமக்குடியில் ரயில் எஞ்சின் மீது ஏறிய இளைஞர்... கொடியசைத்தபோது தாக்கிய மின்சாரம்.. பதறவைக்கும் காட்சிகள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios