பரமக்குடியில் ரயில் எஞ்சின் மீது ஏறிய இளைஞர்... கொடியசைத்தபோது தாக்கிய மின்சாரம்.. பதறவைக்கும் காட்சிகள்

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த இளைஞர் பரமக்குடி ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் மீது ஏறி கொடியசைத்த போது மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

An incident of electrocution on a person who climbed on top of a train engine in Paramakudi has created a sensation

ரயில் என்ஜின் மீது ஏறிய இளைஞர்

 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயிலில் தேவகோட்டையை சேர்ந்த இளைஞர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வந்துள்ளனர். பரமக்குடி ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளனர். அப்போது தேவகோட்டையில் இருந்து அஞ்சலி செலுத்த வந்த பெருமாள் என்பவரின் மகன் முகேஷ் (வயது 20,) என்ற இளைஞர் உள்ளிட்ட மேலும் சிலர் ரயில் என்ஜின் மீது ஏறி கொடியை அசைக்கமுற்பட்டனர்.

கல்குவாரிக்கு எதிராக புகார்...! லாரியை ஏற்றி கொலை... துடி துடித்து பலியான விவசாயி

An incident of electrocution on a person who climbed on top of a train engine in Paramakudi has created a sensation

மின்சாரம் தாக்கி இளைஞர் காயம்

அப்போது அருகில் இருந்தவர்கள் மேலே ஏற வேண்டாம் கொடி அசைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் எதையும் கண்டு கொள்ளாத அந்த இளைஞர் கோடியை அசைத்த போது உயரழுத்த மின்சார கம்பிகள் கொடி கம்பு உரசியபோது மின்சாரம் தாக்கி அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். உடல் முழுவதும் பலத்த காயமடைந்தவரை அருகில் இருந்த போலீசார் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

 

முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அஞ்சலி செலுத்த வந்த இளைஞர் ரயில் எஞ்சின் மீது ஏறியபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

கல்குவாரிக்கு எதிராக புகார்...! லாரியை ஏற்றி கொலை... துடி துடித்து பலியான விவசாயி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios