Asianet News TamilAsianet News Tamil

TN Rain Alert : 23 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுது மக்களே.. வானிலை மையம் எச்சரிக்கை

இன்று தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rain in 23 districts of Tamil Nadu
Author
First Published Dec 27, 2022, 3:54 PM IST

தமிழகத்தில் நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (27.12.2022) வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heavy rain in 23 districts of Tamil Nadu

இதையும் படிங்க.. Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!

28.12.2022 முதல் 30.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 31.12.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

27.12.2022:  கேரள கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும்,  மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. DMK Vs BJP : 'தம்பி மல! பில்லு இன்னும் வரல'.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த திமுகவினர் - வைரல் போஸ்டர்!

Follow Us:
Download App:
  • android
  • ios