Asianet News TamilAsianet News Tamil

தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை.. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களே கவனம் தேவை - ஆட்சியர் வெளியிட்ட தகவல்!

Thoothukudi Rain Alert : இன்று ஜனவரி 5ம் தேதி தூத்துக்குடியில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை ஜனவரி 6ம் தேதியும் அங்கு பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy Rain Expected Thoothukudi Collector alert for people to be safe ans
Author
First Published Jan 5, 2024, 11:12 PM IST

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கன மழை பெய்து ஊரே வெள்ளைக்காடாக மாறியது. பல வீடுகளில் முதலாம் தலம் மூழ்கும் அளவிற்கு மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது இன்றும் அழியாத நினைவுகளாக மாறி உள்ளது. 

கால்நடைகளையும், உடைமைகளையும் சிலர் வீடுகளையும் அந்த வெள்ளத்தில் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென் மாவட்டங்கள் தற்போது தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை ஜனவரி 6ஆம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று தற்பொழுது நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புதுவையில் மாமூல் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்; குண்டு வெடித்து ரௌடி காயம்

அதேபோல தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல், கன மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள தகவலின் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஜனவரி 5ஆம் தேதி பரவலாக நல்ல மழை பெய்தது. 

அதேபோல நாளை ஜனவரி 6ஆம் தேதியும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், மின்சாரதன பொருட்களை கவனமாக கையாளும்படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதி, கலியாவூர் முதல் புன்னகாயல் வரை கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை தமிழகத்தில் பல இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை மறை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கெத்துக்காக நாட்டு வெடிகுண்டு வீசிய கல்லூரி மாணவர்; புதுவையில் அதிரடி கைது

Follow Us:
Download App:
  • android
  • ios