புதுவையில் மாமூல் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்; குண்டு வெடித்து ரௌடி காயம்
புதுச்சேரியில் மாமூல் கேட்டு தொழிலதிபர் மீது ரவுடி வெடிகுண்டு வீசும் போது தவறி ரௌடியின் காலிலேயே விழுந்து வெடித்ததில் ரௌடி காயம்.
புதுச்சேரி காலப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி சுகன், இவர் கடைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் பிரபல தொழிலதிபர்களை மிரட்டி மாமுல் வாங்குவதும், பணம் பறிப்பதுமே வாடிக்கை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் தொண்டமானத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரவுடி சுகன் மாமூல் கேட்டுள்ளார்.
இதற்கு அவர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகன் தனது கூட்டாளியுடன் இன்று இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் தொழிற்சாலைக்கு சென்றார். மாமூல் தராத ஆத்திரத்தில் இருந்த சுகன் தொழிலதிபர் வெங்கடேசன் மீது வெடிகுண்டு வீசுவதற்காக பேண்ட் பாக்கெட்டில் இருந்த வெடிகுண்டை எடுத்துள்ளார். அப்பொழுது தவறி கீழே விழுந்த வெடிகுண்டு வெடித்ததில் பிரபல ரவுடி சுகன் மற்றும் அருகில் இருந்த தொழிலதிபர் வெங்கடேசன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
வெவ்வேறு மொழிபேசும் மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்: கோவையில் பொங்கல் விழா கோலாகலம்
உடனே சுதாரித்துக் கொண்ட ரவுடி சுகன் மற்றும் அவனது கூட்டாளியுடன் ரத்தம் சொட்ட சொட்ட சம்பவ இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். அப்பொழுது வெடி சத்தம் கேட்டு தொழிற்சாலை உள்ளே இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து பார்க்கும் பொழுது படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த தொழிலதிபர் வெங்கடேசனை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டனர். தற்போது அங்கு அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பழனி முருகன் கோவிலில் நாதஸ்வரம், மேளம் இசைக்க தடை? பக்தர்கள், நிர்வாகிகள் வாக்குவாதம்
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலீசார் தடயங்களை சேகரித்து தப்பிச்சென்ற ரவுடியை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் ரத்த காயங்களுடன் யாராவது அனுமதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தப்பி சென்ற பிரபல ரவுடியான சுகன் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, மிரட்டி பணம் பறிப்பது, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபரை மிரட்டி அவர் மாமூல் தராததால் ஆத்திரமடைந்த ரவுடி தொழிலதிபர் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.