Asianet News TamilAsianet News Tamil

வேலூரில் இரவு முழுவதும் கனமழை; குளு குளு சீசனால் மக்கள் மகிழ்ச்சி... அதிகபட்சமாக 89.6 மி.மீ. பதிவு...

Heavy rain all night in Vellore cool Seasons People happy Maximum 89.6 mm Record ...
Heavy rain all night in Vellore cool Seasons People happy Maximum 89.6 mm Record ...
Author
First Published Jun 8, 2018, 9:09 AM IST


வேலூர்

வேலூரில் இரவு முழுவதும் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் குளு குளு சீசனை அனுபவித்தனர். வேலூரில் அதிகபட்சமாக 89.6 மி.மீ. மழை பதிவானது.

தமிழகத்தில் கத்தரி வெயில் முடிவடைந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. 

கடந்த சில நாள்களாக வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதேபோல, வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. 

இரவு முழுவதும் பெய்த பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இருந்தாலும் கொளுத்தும் வெயிலில் வாடி வதங்கிய ஓட்டுநர்களும், மக்களும் இந்த மழையால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். குளு குளு சீசனை அனுபவித்து மழையை வரவேற்றனர்.

வேலூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு: 

வேலூர் - 89.6 மில்லி மீட்டர், ஆற்காடு - 41.8 மில்லி மீட்டர், குடியாத்தம் - 24 மில்லி மீட்டர், மேல்ஆலத்தூர் - 22.6 மில்லி மீட்டர், வாலாஜாபேட்டை - 16.6 மில்லி மீட்டர், அரக்கோணம் - 9.8 மில்லி மீட்டர், காவேரிபாக்கம் - 9.6 மில்லி மீட்டர், சோளிங்கர் - 6 மில்லி மீட்டர். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios