Asianet News TamilAsianet News Tamil

வேலூர் டூ சென்னை பறந்த இதயம்.. 10 நிமிடத்தில் மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்.. வீடியோ உள்ளே

”சென்னையில் ஒரு நாள்” திரைப்பட பாணியில் வேலூரிலிருந்து சென்னை வரை போக்குவரத்து சீர் செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மின்னல்  வேகத்தில் இதயம், சீறுநீரகம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 

Heart kidney shifted from Vellore to Chennai through ambulance
Author
First Published Sep 5, 2022, 11:40 AM IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் கணவர் முருகன் ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தனது 2 பெண் பிள்ளைகளுடன் த    னியாக வாழ்ந்து வருகிறது. இவருக்கு வயது 46. இவர் கூலி வேலை செய்து, தனது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி மாலை வேளையில் சாலையில் ஓரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்த கலைச்செல்வி மீது, பின்பக்கமாக அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கலைசெல்வி, அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

மேலும் படிக்க:சென்னையில் டீசல் தட்டுப்பாடு...! வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதி..! காரணம் என்ன..?

அங்கு தீவிர சிக்கிச்சையில் பிரிவில் சேர்க்கபப்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் நேற்று காலை மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து சோகத்தில் இருந்த அவரது குடும்பத்தினர், சேவை நோக்குடன் கலைச்செல்வியின் இதயம் உட்பட உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதற்கான அறுவை சிகிச்சை வேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கான அறுவை சிக்கிசை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதல் முறையாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 
தொடர்ந்து அவரது இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் படிக்க:பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்...! 15 நாட்களில் இவ்வளவு வசூலா..??

இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், வலது சிறுநீரம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல், இரண்டு கண்கள் சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

காவல்துறையின் உதவியுடன் ’சென்னையில் ஒரு நாள்’ திரைப்பட பாணியில் வேலூர் முதல் சென்னை வரை போக்குவரத்து சீர்செய்யப்பட்டு, குறித்த நேரத்தில் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் மூலம் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. பொதுமக்கள் வழிநெடுகிலும் ஒத்துழைப்பு வழங்கினர்.

மேலும் படிக்க:பயணிகள் கவனத்திற்கு !! மதுரை - செங்கோட்டை சிறப்பு இரயில் இன்று முதல் ரத்து.. காரணம் இதுதான்..

Follow Us:
Download App:
  • android
  • ios