Asianet News TamilAsianet News Tamil

திருவள்ளூரில் சுகாதார பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம். ஏன்?

Health Workers in Tiruvallur held in hunger strike Why?
Health Workers in Tiruvallur held in hunger strike Why?
Author
First Published May 5, 2018, 12:04 PM IST


திருவள்ளூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர் திருவள்ளூரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். 

திருவள்ளூர் மாவட்டம், எம்.ஜி.ஆர். சிலை அருகே சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்  எஸ்.சந்தோஷ்மேரி தலைமை வகித்தார். 

தமிழ்நாடு கொசு ஒழிப்பு சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹேமசந்திரன், மாநிலச் செயலாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.பொன்னிவளவன் சிறப்புரை வழங்கினார். 

இந்த போராட்டத்தில், "கொசு ஒழிப்பு சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்குதல், 

அடையாள அட்டைகள் வழங்குதல்" போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

இந்தப் போராட்டத்தில், மாநில துணைத்தலைவர் சிவராஜ், மாநில துணைச்செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின் இறுதியில் எஸ்.வெங்கடேஷ் நன்றி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios