Health Minister Vijayabaskar has said that a new infectious disease called Giga Virus has been reported in Tamil Nadu

தமிழகத்தில் ஜிகா வைரஸ் என்ற புதிய நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் தொற்று நோய் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் நாற்றாம்பாலையத்தில் 27 வயது இளைஞர் ஒருவர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்நோய் தமிழகத்திற்கு வருவது இதுவே முதல் முறை எனவும், இந்நோயினால் பாதிக்கப்ட்டவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்த போது தான் தெரியவந்ததாக குறிப்பிட்டார்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் தோல் அரிப்பு, தலை மூட்டுவலி மற்றும் உடல் சோர்வு ஏற்படும் என்றும் இந்நோய் 2 நாளில் இருந்து 7 நாட்களுக்குள் பாதிப்பை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நோயால் பாதிக்கப்பட்டால் உயிரிழப்பு ஏற்படாது எனவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால் குணமடைந்து விடலாம் என்றும் அமைச்சர் கூறினார். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்த கூடிய ஏடிஎஸ் என்ற வைரஸின் தாக்கத்தால் ஜிகா வைரஸ் நோய் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நோய் கடந்த 2016ம் ஆண்டே இந்நோய் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந் நோய்கான மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் கேரளாவை ஒட்டியுள்ள 12 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி பிரியதர்ஷினி உயிரிழந்துள்ளதாகவும் அந்தியூர் மற்றும் பவானியில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் ரோட்டோ வைரஸ் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாகவும், தெரிவித்தார்.