Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. புதிய கட்டுப்பாடுகள் விதிக்க அமைச்சர் ஆலோசனை.. வெளியான முக்கிய தகவல்..

தமிழகத்தின்‌ சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்‌ இரட்டை இலக்கத்தில்‌ கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்‌ தெரிவித்துள்ளார்‌. மேலும் சென்னையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தினால் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Health Minister Ma.Subramanian discussion with officials on controlling the spread of corona
Author
Tamilnádu, First Published Jun 15, 2022, 3:22 PM IST

தமிழகத்தின்‌ சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்‌ இரட்டை இலக்கத்தில்‌ கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்‌ தெரிவித்துள்ளார்‌. மேலும் சென்னையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தினால் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில்‌ கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 50க்கும் கீழ் குறைவாக பதிவான நிலையில் தற்போது 300 க்கும் மேல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில்‌ நேற்று 332 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 9 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா.. ஒரே நாளில் 8,822 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

இந்த நிலையில்‌ தமிழகத்தில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌, துறை அதிகாரிகளுடன்‌ ஆலோசனையில்‌ ஈடுபட்டார்‌. தமிழகத்தின்‌ சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட  5 மாவட்டங்களில்‌ இரட்டை இலக்கத்தில்‌ கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த கூட்டத்தில்‌ தொற்றின்‌ எண்ணிக்கை தொடர்ந்து பரவாமல்‌ தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டது. சென்னையில்‌ மட்டும்‌ சில கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டதாக தகவல்‌ வெளியாகியுள்ளது.

 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 255 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 332 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 171 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,32,45,517 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,792 ஆக உள்ளது. நாட்டில் உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது. 

மேலும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கு பரவும் கொரோனா.. அதிர்ச்சியில் பெற்றோர்.. 31 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு..

Follow Us:
Download App:
  • android
  • ios