பள்ளி மாணவர்களுக்கு பரவும் கொரோனா.. அதிர்ச்சியில் பெற்றோர்.. 31 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு..

கர்நாடக மாநிலம் பெங்களூரில்‌ பள்ளி மாணவர்களுக்கு 31 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Coronavirus positive 31 students in Bangalore

பெங்களூரில்‌ கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கர்நாடக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. .

இந்நிலையில் நியூ ஸ்டாண்டர்ட்‌ ஆங்கிலப்‌ பள்ளியில்‌ 6-ம்‌ வகுப்பு படிக்கும்‌ 21 மாணவர்களுக்கும்‌, எம்‌இஎஸ்‌ பள்ளியில்‌ 5 ஆம்‌ வகுப்பு படிக்கும்‌ 10 மாணவர்களுக்கும்‌ கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது அறிகுறிகளுடன்‌ தென்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 31 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: 104 மணி நேரங்கள்... 500 பேரின் உழைப்பு... ஆழ்துளை கிணற்றில் இருந்து 11 வயது சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?

இதனையடுத்து கொரோனா தொற்று உறுதியான இரண்டு பள்ளிகளும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பெங்களூருவில்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளில்‌ கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத்‌ மேற்கொள்ளவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்‌ கல்வி நிறுவனங்களில்‌ ஆசிரியர்கள்‌, மாணவர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு கட்டாயம்‌ தெர்மல்‌ ஸ்கேனிங்‌ செய்யுமாறு கேட்டுக்‌ கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெங்களூரில்‌ தினசரி கொரோனா 500க்கும்‌ கீழ் பதிவான நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,738 பேரில்‌ 28 பேர்‌ மட்டும்‌ மருத்துவமனைகளில்‌ சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. கடந்த 24 மணி நேரத்தில்‌ புதிதாக 582 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. 
 

மேலும் படிக்க: கால்நடைக்கு உடம்பு சரியில்லை... மருத்துவரை கடத்தி கட்டாய திருமணம்.. பீகாரில் பரபரப்பு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios