கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்பட்டால் ரூ.500 அபராதம்! சுகாதாரத்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் நடந்துகொண்டால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Health department to levy Rs 500 fine for acts leading to mosquito breeding sgb

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கம் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டெங்கு பரவலுக்குக் காரணமான கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்போவதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்க தவறி விட்டீர்களா? அப்படினா விண்ணப்பிக்க வாய்ப்பு.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்.!

Health department to levy Rs 500 fine for acts leading to mosquito breeding sgb

அதில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்துவரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது என்று கூறியுள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் உடனே சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

டெங்கு பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்காவிட்டால், மருத்துவமனை மீது உரிய விதிமுறைகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல பொதுமக்கள், கடைகள், நிறுவனங்கள் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் விதமாக செயல்பட்டால், அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விதிமீறலின் தன்மையைப் பொறுத்து ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும்  சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் எச்சரித்துள்ளார்.

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த பகுதியில் மட்டும் 5 மணிநேரம் பவர் கட்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios