தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், சுகாதாரத்துறை இன்றும் நாளையும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. சளி, காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவோரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படும்.
Health department on alert for mysterious fever in Tamil Nadu : தமிழ்நாடு முழுவதும் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் மழை நீர் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வைரஸ் காய்ச்சல் பரவல் தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாஸ்க் எனப்படும் முகக்கவசம் அணிய சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது. முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் திருமணம் உள்பட பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் மர்ம காய்ச்சல்
இந்த நிலையில் இன்றும் நாளையும் காய்ச்சல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆய்வாளங்களுக்கு மருத்துவமனைகளில் சளி காய்ச்சல் இரும்பல் தலைவலி தொண்டை பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகளோடு சிகிச்சைப் பெறுவரும் நோயாளிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதியவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறை உள்ளவர்கள் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
முககவசம் யாரெல்லாம் அணியவேண்டும்
தற்போது பரவுவது வருவது இம்ப்ளுயன்சா காய்ச்சல் தவிர வேறு ஏதும் வைரஸ் காய்ச்சலும் இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. எனவே காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளவர்கள் மட்டுமே முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம் தவிர மற்றவர்கள் அவசியம் இல்லை எனவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.


