மயிலாடுதுறை அருகே 9 ஆண்டுகளாக இயங்கி வந்த போலி பல்கலைக்கழகம் நடத்திய செல்வராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மாற்று முறை மருத்துவச்சான்று வழங்க செல்வராஜ் தலா ரூ.1 லட்சம் பெற்றது அம்பலமாகியுள்ளது.
மயிலாடுதுறை அருகே 9 ஆண்டுகளாக இயங்கி வந்த போலி பல்கலைக்கழகம் நடத்திய செல்வராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மாற்று முறை மருத்துவச்சான்று வழங்க செல்வராஜ் தலா ரூ.1 லட்சம் பெற்றது அம்பலமாகியுள்ளது. செல்வராஜ் நடத்திய போலி பல்கலைக்கழகத்தில் பெற்ற சான்றிதழ் செல்லாது என மருத்தவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் குத்தாலத்தில், அகில உலக திறந்த நிலை மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம் என்ற பெயரில், பல்கலைக்கழகம் ஒன்றை செல்வராஜ் என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்தார். தொலைதூர பல்கலைக்கழகம் என்ற பெயரில் இவர் நாடு முழுவதும் ஆயுர்வேத சித்தா ஆகிய மருத்துவ துறைகளின்கீழ் சான்றிதழ்கள் அளித்துள்ளார். இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் இவரிடம் பணம் கட்டி ஆயிரக்கணக்கானோர் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மருத்துவ பட்டங்களை பெற்றுள்ளனர்.
இவரிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும் மாற்றுமுறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து விண்ணப்பங்கள் வரவேற்பதாக இவர் அளித்த விளம்பரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இந்த பல்கலைக்கழகம் போலி என தெரியவந்தது. இதனையடுத்து போலி பல்கலைக்கழகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து போலி பல்கலைக்கழகத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையடுத்து தற்போது அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். மேலும் போலி பல்கலைக்கழகம் நடத்திய செல்வராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 11, 2019, 11:27 AM IST