Asianet News TamilAsianet News Tamil

"விதிகளை மீறினால் லைசென்ஸ் ரத்து" - ஆட்டோக்காரர்களுக்கு உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!!

hC warning auto drivers
hC warning auto drivers
Author
First Published Jul 25, 2017, 4:52 PM IST


விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் விதிகளை மீறி ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும், அதிக அளவில் பயணிகளை ஏற்றுவதும், அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களில் ஓட்டுநர்கள் ஈடுவடுவதாக கூறி பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சத்யா புஷ்பநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை மாவட்டத்தில் 7,900 ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும், 2016 ஜூன் மாதம் வரை விதிமீறலில் ஈடுபட்ட 915 ஆட்டோக்களின் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

hC warning auto drivers

மேலும், 1 கோடியே 67 லட்சம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோக்கள் மீது உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை விதிமீறல் தொடர்பாக ஆட்டோக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய மண்டல போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios