2019-ல் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. தற்போது வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், CAA போல தீவிரம் குறைவு எனக் கூறப்பட்டாலும், இஸ்லாமிய அமைப்புகள் அதை மறுக்கின்றன.
Waqf Law Amendment vs CAA protests : மத்தியில் பாஜக அரசு, 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதும், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) வை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. "1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி, குடியுரிமை பெற 'மதம்' ஒரு அடிப்படையாக இல்லை. ஆனால், மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த திருத்தத்தில், மதத்தை ஒரு அடிப்படையாக மாற்றியது. பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்தது.
வக்ஃபு திருத்த சட்டம்! பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்த 'தாவூதி போரா' இஸ்லாமியர்கள்!
நாடு முழுவதும் போராட்டம்
அதே நேரம் இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறாமல் இருந்தது. எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தொடர் பெரும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. பல இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். நாட்டையே அதிர வைத்த இந்த போராட்டம் அப்போது பேசு பொருளாக மாறியது.
வக்ஃப் சட்ட திருத்தம்- எதிர்கட்சிகள் போராட்டம்
இந்த நிலையில் தற்போது மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடித்த பாஜக அரசு வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவத்தது. இதனையடுத்து கூட்டு குழுவிற்கு அனுப்பப்பட்ட நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல இடங்களில் இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் எதிர்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் கடந்த முறை குடியுரிமைத் திருத்த சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது அந்த அளவிற்கு போராட்டங்கள் நடைபெறவில்லையென கூறப்பட்டு வருகிறது.
போராட்டம் தீவிரம் அடையவில்லையா.?
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவான NRC மற்றும் CAA விஷயத்தில் போலல்லாமல், வக்ஃப் சட்ட திருத்த மசோதா தனிப்பட்ட உரிமைகள் ஆபத்தில் இல்லாததால் போராட்டங்கள் தீவிரம் அடையவில்லையென தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த தகவல் இஸ்லாமிய அமைப்புகள் மறுத்துள்ளது. போராட்டங்கள் தீவிரம் அடையவில்லையென கூறுவது தவறு. CAA போராட்டத்தை விட தற்போது தமிழகம் முழுவதும் மட்டுமல்ல நாடு முழுவதும் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உச்சநீதிமன்றம் தடை
கடந்த வாரம் தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களில் போராட்டங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர். மேலும் குடியுரிமை சட்ட மசோதா போராட்டம் பல மாத காலம் நடைபெற்றது. வக்ஃப் சட்டம் கொண்டு வந்து ஒரு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளளதால் போராட்டமானது தற்போது மட்டுமே குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
