வக்ஃபு திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த நிலையில், இந்த சட்டத்துக்கு ஆதாவு தெரிவித்த 'தாவூதி போரா' இஸ்லாமியர்கள் பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Dawoodi Bohra Community Meets PM Modi: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய வக்ஃபு திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாகவும், வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடியை சந்தித்து நன்றி 

இந்த சட்டத்துக்கு பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க சில இஸ்லாமிய பிரிவுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தாவூதி போரா பிரிவை சேர்ந்த இஸ்லாமிய பிரநிதிநிதிகள் வக்ஃபு சட்டத்தை கொண்டு வந்ததற்காக இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இது சமூகத்தின் நீண்டகால கோரிக்கை என்று அவர்கள் கூறினர். பிரதமரின் 'சப் கா சாத், சப் கா விகாஸ், சப் கா விஸ்வாஸ்' என்ற தொலைநோக்குப் பார்வையில் அவர்கள் நம்பிக்கை வைத்தனர்.

யார் இந்த தாவூதி போரா இஸ்லாமியர்கள்?

தாவூதி போராக்கள் முதன்மையாக மேற்கு இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர். உலகெங்கிலும் உள்ள 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் உறுப்பினர்கள் குடியேறியுள்ளனர். தாவூதி போரா சமூகம் எகிப்தில் உள்ள தீர்க்கதரிசி முகமதுவின் நேரடி வழித்தோன்றல்களான பாத்திமித் இமாம்களிடமிருந்து தங்கள் பாரம்பரியத்தைக் கண்டறிகிறது. உலகெங்கிலும் உள்ள தாவூதி போராக்கள் அல்-டை அல்-முத்லக் (வரம்பற்ற மிஷனரி) என்று அழைக்கப்படும் தங்கள் தலைவரால் வழிநடத்தப்படுகிறார்கள்.

வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?

அவர் முதலில் ஏமனிலிருந்தும், பின்னர் கடந்த 450 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்தும் செயல்பட்டார்.
இதற்கிடையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வக்ஃபு சட்டத்தால் வன்முறை பாதித்த முர்ஷிதாபாத் மாவட்டத்திற்கு ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மேற்கொள்ளவிருந்த பயணத்தை, அப்பகுதியில் மக்களின் நம்பிக்கையும் இயல்பு நிலையும் திரும்பிய பின்னர் ஒத்திவைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். வக்ஃப் (திருத்தச்) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் மூன்று பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த தனது கொள்கையை அறிவித்ததாக அவர் கூறினார்.

மம்தா பானர்ஜி சொல்வது என்ன?

இன்று நபன்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, "ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கும் 10 லட்சம் ரூபாய் வழங்குகிறோம். வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு, அவர்களின் வீடுகளை மீண்டும் கட்டமைப்போம். கடைகள் சூறையாடப்பட்டவர்களுக்கும் உதவுவோம். அடுத்த விசாரணை வரை, தற்போதைய நிலை மாற்றங்கள் இல்லாமல் பராமரிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்திற்குச் செல்வதற்கு முன், ஆளுநர் சில நாட்கள் காத்திருக்குமாறு நான் வேண்டுகோள் விடுப்பேன். முதலில் நம்பிக்கையை உருவாக்குவோம்" என்று கூறினார்.

இஸ்லாமியர்களுடன் துணை நிற்பேன்! வக்ஃபு சட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விஜய் வரவேற்பு!