கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் டெல்டா மாவட்டங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மக்கள் அங்கு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். தற்போது தமிழகம் முழுக்க இதற்காக மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குரல் கொடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டில் ''ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம்.முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே'' என்று உருக்கமாக எழுதியுள்ளார்.  அதுமட்டுமில்லாமல் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டில் உதவி எண்களையும் பகிர்ந்துள்ளார். மீட்பு பணிக்காக அரசு அளித்து இருக்கும் அவசர உதவி எண்களை அளித்து இருக்கிறார்.