10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு.. ஹால் டிக்கெட் எப்போது பெறலாம்..? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..
10 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை ஜூலை 22 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது.
மாநில பாடத்திடத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெற்றன.
மேலும் படிக்க:பிளஸ் 2 துணைத்தேர்வு.. ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்போது..? எப்படி..? முழு தகவல்
அதுமட்டுமில்லாமல், ஜூலை 5 முதல் 7 வரை, கூடுதல் கட்டணம் செலுத்தி, தக்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் துணைத் தேர்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
மேலும் படிக்க:மாதம் ரூ.62,000 சம்பளம்.. ஊரக வளர்ச்சி துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு !
எனவே மாணவர்கள் தங்களுக்கான நூழைவுச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நூழைவுச்சீட்டை பெறுவது எப்போது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிரை நடைபெறுகின்றன. 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை ஜூலை 22 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது.