பிளஸ் 2 துணைத்தேர்வு.. ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்போது..? எப்படி..? முழு தகவல்

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை மாணவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
 

Examination Hall ticket for Plus 2 supplementary exam can be downloaded from today

கடந்த ஜூன் 20 ஆம் தேதி 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, ஜூலை 25 முதல் ஆக.,1 வரை துணைத்தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்கான விண்ணப்பிப்ப பதிவு ஜுன் 27 ஆம் தேதி தொடங்கி ஜூலை 4 வரை தேதி வரை நடைபெற்றது. 

மேலும் படிக்க:10, 12 ல் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு.. இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்..தெரிந்துக்கொள்ள வேண்டியவை?

அதுமட்டுமில்லாமல், ஜூலை 5 முதல் 7 வரை, கூடுதல் கட்டணம் செலுத்தி, தக்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் துணைத் தேர்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான நூழைவுச்சீட்டை மாணவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:TNPSC : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. போட்டித் தேர்வர்களே உஷார் !

மேலும் தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் http://dge.tn.gov.in en என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு நுழைவுச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதனிடையே 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஆக., 2 முதல் 10 வரையிலும், பத்தாம் வகுப்புக்கு ஆக.,2 முதல் 8 வரையிலும் துணைத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios