Asianet News TamilAsianet News Tamil

ஜிஎஸ்டி வரி அல்ல வழிப்பறி: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

ஜிஎஸ்டி வரி அல்ல வழிப்பறி என முதல்வர் ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார்

GST is not the tax it is a robbery alleges tn cm mk stalin smp
Author
First Published Apr 15, 2024, 3:08 PM IST

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு இன்றளவும் எதிர்ப்புகள் உள்ளன. இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் ஜிஎஸ்டி முக்கிய பங்கு வகித்து வருகிறது.

ஜிஎஸ்டி வரி வசூல் முழுமையாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களுக்கான பங்களிப்பு போக மீதமுள்ள தொகை மத்திய அரசுக்கு வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி, ஏழைகளை பாதிக்காத வண்ணம் மாற்றியமைக்கப்படும் என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றி வடிவமைக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி அல்ல வழிப்பறி என முதல்வர் ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “GST: வரி அல்ல… வழிப்பறி! “தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

 

 

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

Liquor Policy Case அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.

ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios