சுமார் 18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு டிஎன்பிஎஸ்சி கடந்த 24.07.2022 அன்று குரூப் 4 தேர்வை நடத்தியது. இந்த தேர்விற்கு 22,02,942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 18,36,535 பேர் தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு 3 பெண்கள் கைது
எனவே, குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே டிவிட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது.
இதையும் படிங்க: குளக்கரைக்கு வரும் காதல் ஜோடிகள் தான் டார்கெட்; 4 இளைஞர்களை பொறி வைத்து தூக்கிய காவல்துறை
இதுமட்டுமின்றி மீம்ஸ்களும் இணையத்தை நிரப்பின. இதை அடுத்து குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சுமார் 18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை tnpscexams.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
