Asianet News TamilAsianet News Tamil

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு 3 பெண்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 ladies arrested for chain snatching issue in kanyakumari
Author
First Published Mar 24, 2023, 6:15 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அருகே உள்ள அனந்த நாடார்குடி பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் ஜெயபால். இவரது மனைவி சுனிதா. இவர் அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சுனிதா வேலைக்கு செல்வதற்காக பருத்திவிளை சந்திப்பில் இருந்து அம்மாண்டிவிளைக்கு செல்லும் பேருந்தில் பயணம் செய்தார்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ சிலர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சுனிதா ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் சில பெண்கள் அங்குமிங்குமாக அடிக்கடி சுற்றித்திரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜாக்கமங்கலம் காவல் ஆய்வாளர் காந்திமதி தலைமையில் காவல் துறையினர் ஆலங்கோட்டை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவில் 3 பெண்கள் இருந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண்கள் தான் அவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குளக்கரைக்கு வரும் காதல் ஜோடிகள் தான் டார்கெட்; 4 இளைஞர்களை பொறி வைத்து தூக்கிய காவல்துறை

அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். உடனே சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி பிரியா என்ற தேவானை (29), மைக்கேல் மனைவி நதியா என்ற மாரீஸ்வரி (24) மற்றும் குமார் மனைவி பிரியா என்ற ஈஸ்வரி (25) என்பதும் அவர்கள் 3 பேரும் பஸ்சில் பயணம் செய்த சுனிதாவிடம் 7 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது.

ஆடைகளை இழுத்து துன்புறுத்துகின்றனர்; காலர்களை கண்டித்து திருநங்கைகள் ஒப்பாரி வைத்து போராட்டம்

இதனை தொடர்ந்து காவல் துறையினர் 3 பேரை கைது செய்தனர். மேலும் கைதான 3 பேரும் சேர்ந்து வேறு ஏதாவது நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என விசாரணை நடந்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios