Green silk dressed azhagar up the river

மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா மிகவும் விமர்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த 18ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான தங்க குதிரையில், அழகர் ஆற்றில் இறங்கும் வைபோவம் இன்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டர். 

இந்த வருடம் செழிப்பை குறிக்கும் விதத்தில் அழகர் பச்சை நிற பட்டாடை உடுத்தி, தங்கக் குதிரை ரதத்தில் ஊர்வலமாக வந்து அதிகாலை மக்களுக்குத் தரிசனம் அளித்தார். பின்னர் காலை 6 மணி அள‌வில்‌ வைகை ஆற்றிற்கு வந்தடைந்த சுந்தர்ராஜ பெருமாளான கள்ளழகர், ஆற்றில் இறங்கினார்.

இதில் பக்தர்கள் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்துக்கொண்டு அழகரை வழிப்பட்டனர்.