govt job assigned to anithas brother by edapadi palanisami
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அவருடைய சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளது.
அனிதாவை இழந்து பெரும் துன்பத்தில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு நிவாரண தொகையும்,குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
கோதரருக்கு அரசு பணி
இதனை தொடர்ந்து,அனிதாவின் சகோதரருக்கு சுகாதாரத்துறையில் வேலை வழங்கியுள்ளது தமிழக அரசு
அரசு பணிக்கான ஆணையை அனிதாவின் சகோதரர சதீஷ்குமாரிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்
மேலும்,7 லட்சத்திற்கான நிவாரண தொகையை அனிதாவின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சதீஷ் குமாரிக்கு,சுகாதாரத்துறையில்,இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டு உள்ளது.அனிதா மருத்துவராக ஆசைப்பட்டார்.ஆனால் அவருடைய இறப்பால்,சகோதரர் சதீஷ்குமாருக்கு சுகாதாரத்துறையிலேயே வேலை வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
