ஏசுபிரான் அவதரித்த இத்திருநாளில், அன்பு, இரக்‍கம் அமைதியை வளர்த்து இணக்‍கமான உலகம் ஒன்றை உருவாக்‍க நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும் என்று தமிழக ஆளுநர் திரு.வித்யாசகர்ராவ் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

தமிழக ஆளுநர் திரு வித்யாசாகர்ராவ் இன்று விடுத்துள்ள கிஸ்ஸ்துமஸ் தின வாழ்த்து செய்தியில் ஏசுபிரானின் பிறப்பு என்பது தீமையின் அழிவு என்பதையும், வேதனையில் வாடும் நம் சகோதரர்களின் துயர் துடைப்பது நமது கடமை என்பதையும் நினைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இத்திருநாளில், நாம் அனைவரும் அன்பு, இரக்‍கம், அமைதியை வளர்த்து, நல்லிணக்‍கமான உலகத்தை உருவாக்‍க உறுதிபூணுவோம் என்றும் அவர் கேட்டுக்‍கொண்டுள்ளார். கிறிஸ்துவ சகோதரர்களுக்‍கு மகிழ்ச்சி நிறைந்த ஆனந்தமான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துக்‍கொள்வதாகவும் ஆளுநர் திரு.வித்யாசாகர்ராவ் குறிப்பிட்டுள்ளார்.