Asianet News TamilAsianet News Tamil

என்ன நடக்குது இங்க ? - தலைமைசெயலாளர் கிரிஜாவை அழைத்து விளக்கம் கேட்கிறார் கவர்னர்

governor call-off-chief-secretary
Author
First Published Dec 27, 2016, 2:34 PM IST


ராம் மோகனராவின் பேட்டியை மத்திய அரசு ரசிக்கவில்லை அதனால் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை உடனடியாக அழைத்த கவர்னர் ராம் மோகன ராவின் அதிரடி பேட்டி குறித்து விளக்கம் கேட்டதாக தெரிகிறது.

சமீபத்தில் தமிழக தலைமைசெயலாளராக் இருந்த ராமமோகன்ராவின் இல்லாம், அவரது மகன் , உறவினர் இல்லங்கள், அலுவலகங்கள் எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக தலைமை செயலகத் தில் உள்ள தலைமை செயலாளர் அறை உட்பட 14 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 

governor call-off-chief-secretary

தமிழக தலைமை செயலகம் , ராம் மோகனராவின் இல்லத்தில் துணை ராணுவப்படை பாதுகாப்பு மூலம் சோதனை நடத்தியது குறித்து சர்ச்சைகள் எழுந்தது. சோதனியின் போது முதல்வர் ஓ.பன்னீர்செலவம் அலுவலக அறையில் தான் இருந்தார். ஆனால் அவர் கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் ஆங்காங்கே தீரன் , செங்கோட்டையன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தலைமை செயலாளர் பதவியிலிருந்து தூக்கி எரியப்பட்ட ராம் மோகன ராவ் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். புதிய தலைமைசெயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். 

governor call-off-chief-secretary

இந்நிலையில் இன்று பேட்டியளித்த ராம் மோகன ராவ் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறினார். மத்திய அரசின் அதிகாரி என்பதை மறந்து மத்திய அரசை விமர்சித்தார். தான் இப்போதும் தலைமை செயலாளர்தான் என்று தெரிவித்தார். 

முதலமைச்சர் ஜெயலலிதா சொல்படித்தான் நான் நடந்தேன் என்றார், அவர் உயிருடன் இருந்திருந்தால் தலைமை செயலகத்துக்குள் நுழைந்திருக்க முடியுமா என்று கேட்டார். தனது வீட்டில் நடத்திய ரெய்டு குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.

இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதை யாரும் ஆதரிக்கவில்லை. எதிர்கட்சிகளும் இது பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து விளக்கம் கேட்க தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைத்தார். 

உடனடியாக தலைமை செயலாளர் கவர்னர் மாளிகைக்கு சென்றார். ஒரு மணி  நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் ராம் மோகன ராவின் பேட்டி மத்திய மாநில அரசுகளின் உறவு குறித்தே பேசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios