governor banwarilal purohit examined mamallapuram area and temple
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்துக்கு முழு நேர ஆளுநராக பன்வாரி லால் புரோஹித் நியமிக்கப் பட்ட பின்னர், அவர் திடீரென ஆய்வுப் பணிகளுக்காக என்று கூறி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று வருகிறார்.
முன்னர் கோயமுத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் நிலவரங்களைக் கேட்டறிந்தார். இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொண்டார்.

மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் இடம். இங்கே உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகின்றனர். எனவே, இந்தப் பகுதியில்,
சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் பற்றி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும், மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் நிலைமை குறித்தும் ஆளுநர் கேட்டறிந்தார்.

முன்னதாக, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்தலசயனப் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். கோயிலுக்கு வந்த அவருக்கு கோயிலின் சார்பில் மரியாதைகள் வழங்கப் பட்டன. அங்கே சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தார் பன்வாரி லால் புரோஹித்.
