Government Transport Corporation employees demonstrate demands including wage increases ...
திருச்சி
ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டல அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அரசப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மண்டலப் பொதுச்செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். காரைக்குடி கோட்டச் செயலாளர் நீலமேகம் முன்னிலை வகித்தார்.
"அரசு ஊழியர்களை போல் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் 2.57 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,
மருத்துவ காப்பீட்டு தொகை, இறப்பு நிவாரண தொகை, பஞ்சப்படி உயர்வு நிலுவையை உடனே வழங்க வேண்டும்,
ஓய்வூதிய பணப்பலன்களையும், வாரிசு பணி நியமனத்தையும் வழங்க வேண்டும்" என்ற ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த கோரிக்கைகளை விளக்கி மண்டல பொதுச்செயலாளர்கள் ஆரோக்கியம், ராஜசேகர், சுப்பிரமணி ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் திருச்சி மண்டல பொருளாளர் எத்திராஜ் நன்றித் தெரிவித்தார்.
