கரூர்

மருத்துவத் திட்டத்தை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் நலச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் நலச் சங்கத்தின் பேரவைக் கூட்டம் நடைப்பெற்றது.

இதற்கு கே. மருதமுத்து தலைமைத் தாங்கினார். இந்தக் கூட்டத்தில், மாவட்டத் தலைவர் துரைராஜ் வரவேற்றார். செயலாளர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். மாநில பொறுப்பாளர் சிவப்பிரகாசம் சிறப்புரையாற்றினார். 

இந்தக் கூட்டத்தில், "அகவிலைப்படி, ஒப்பந்த ஊதிய உயர்வு தொடர்பாக வழக்குத் தொடர்வது, 

போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளாக வரவேண்டிய பணப்பலன்களை 2017 நவம்பர் வரை வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிப்பது, 

மருத்துவத் திட்டத்தை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் வழங்க வலியுறுத்துவது, 

மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3000, அதிகபட்ச பணிக்கொடை ரூ.20 இலட்சம் வழங்கிட வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.