தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் சிறப்பு போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழக அரசில் பணியாற்றும் ‘ஏ’  மற்றும் பி’ பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியமாக வழங்கப்படும். அதேபோல் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 சிறப்பு மிகை ஊதியமாக வழங்கப்படும். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.