அ.இ.அ.தி.மு.க. கட்சியின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சருமான மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரனின் 100-வது பிறந்தநாளான வரும் 17-ந்தேதியை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ரின் 100-வது பிறந்தநாள் விழா வரும் 17-ந்தேதி வருகிறது. இந்த நாளை ஆளும் கட்சியான அ.தி.மு.க. சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுஉள்ளது. 2017 ஜனவரி 17-ந்தேதியில் இருந்து 2018-ந்தேதி ஜனவரி 17ந்தேதி வரை ஒரு ஆண்டுக்கு கொண்டாட அந்த கட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளா வரும் 17-ந்தேதியன்று பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு ெவளியிட்டது.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
டாக்டர் எம்.ஜி.ராமசந்திரனின் நாற்றூண்டு விழாவினை முன்னிட்டு 17-1-2017 மட்டும் செலாவணி முறிச்சட்டம் 1981-ன் கீழ் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறையானது மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசினால் அமைக்கப்பட்ட வாரியங்கள், மற்றும் கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள், உட்பட அனைத்து வங்கிகள், தொழில்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும். பிற நிறுவனங்களும் இந்த விழாவின் சிறப்பினை கருத்தில் கொண்டு தங்களது அலுவலர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அஎம்.ஜி.ஆரின் 100–வது ஆண்டு பிறந்தநாள் அன்று அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதனை தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் 100–வது ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பு மலரை சசிகலா வெளியிடுகிறார். இந்த நிகழ்வை தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவியை சசிகலா வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST